kplingeswaran.in

வேதாத்திரி மகரிஷி – வித்தியாசமான ஒரு ஞானி !

இதுவரை உலகில் தோன்றிய ஞானிகளிலேயே வேதாத்திரி மகரிஷி அவர்கள் வித்தியாசமானவர் ஆவார் .

ஒரே உருவத்தில் ” மனிதனாகவும் , மகானாகவும் ” மாறி மாறி காட்சியளிப்பவர் .

உதாரணமாக , அவர் இறைநிலையைப் பற்றி விளக்கும் போது , வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் இறைவனை மறக்கக் கூடாது என்பதை எவ்வாறு அன்றாட வாழ்க்கையில் இருந்து, உவமை கூறி புரிய வைக்கிறார் என பாருங்கள் .

” விற்பனை விலையை நிர்ணயிப்பவர், கொள்முதல் விலையை மறக்காதது போல … “

” புக்ககம் புகுந்தும் , பெற்றகம் மறவாள் போல … “

” வாழ்க்கை என்பதே சிக்கல்கள் நிறைந்த ஒரு மனப் போராட்டம் ஆகும் ” என வேதாத்திரி மகரிஷி அவர்கள் தன்னுடைய வாழ்க்கை விளக்கம் நூலில் கூறுகிறார்.

இக்கருத்து , மனித வாழ்க்கையை ” உள்ளது உள்ளபடியே யதார்த்தமாக ” [ reality ] பார்க்கும் ஒரு உளவியல் நிபுணரின் கருத்தை போலவே அமைந்துள்ளது .

இந்த மனப் போராட்டத்திற்கு காரணமான சிக்கல்களை நாமே அதிகரித்து கொள்ளாமல் இருக்கவும் , இருக்கும் சிக்கல்களை முடிந்தவரை அவிழ்க்கவும் , தவிர்த்துக் கொள்ளவுமே – மகரிஷி ” மன வளக்கலையை ” உருவாக்கியிருக்கிறார் என நினைக்கிறேன் .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top