
” இந்திய அக்குபங்சர் மருத்துவத்தின் தந்தை ” என அழைக்கப்படும் டாக்டர். பஸ்லுர் ரஹ்மான் ( MBBS., MD., Ph.d Acu ) அவர்கள் , ” KI – 9 ” என்ற ஒரு அக்குபங்சர் புள்ளியை பற்றி ” பெண்களே உங்களுக்காக ” என்றநூலில் குறிப்பிட்டுள்ளார்.
இது சிறுநீரகங்களுக்கு சக்தி ( kidney meridian ) அளிக்கக்கூடிய ஒரு புள்ளி ஆகும். இதை TCM- ல் ” Beautiful Baby Point ” என அழைக்கிறார்கள் .
பெண் கர்ப்பமாக இருக்கும்போது, சிறுநீரகங்கள் முழு மூச்சில் கரு வளர்ச்சிக்கு ( fetal growth ) உதவுகின்றன. கர்ப்ப காலத்தில் இந்த புள்ளியில், சிகிச்சை அளிப்பது குழந்தை வளர்ச்சிக்கு உதவுவதோடுமட்டுமல்லாமல், மரபு ரீதியான ( genetic disorders ) நோய்கள் குழந்தைக்கு கடத்தப்படாமல் தடுக்கும் என்று குறிப்பிடுகிறார் டாக்டர் அவர்கள்.
நாம் உண்ணும் உணவு , சுவாசிக்கும் காற்று, நீர், உடல் உட்கிரகிக்கும் பிரபஞ்ச சக்தி இவை அனைத்தும் ஒன்றாக கலந்து, ஜீரணம் ஆகி வரும்போது – அதில் கடைசி கட்டமாக சுத்தமான உயிராற்றலை ( Jing ) சிறுநீரகங்கள் பிரித்தெடுத்து சேகரித்து வைக்கின்றன. அதிலிருந்து ஆண்களுக்கு விந்து என்ற திரவமும் , பெண்களுக்கு அதே போன்ற திரவமும் உருவாகின்றன. இவையே உயிரணுக்கள் மற்றும் கரு முட்டைக்கு ” உயிரோட்டம் ” அளித்து, உயிர்த்துடிப்பு பெறச் செய்கின்றன.
மேலும் , மன அழுத்தம் , உணர்ச்சிரீதியான கொந்தளிப்புகள் ( Emotional disturbances and Stress ) மற்றும் நீர்க்கழிவுகளை ( detoxification ) வெளியேற்ற இந்த அக்குபங்சர் புள்ளி உதவும்.