அக்குபங்சரைப் பற்றி பல சந்தேகங்கள் மக்களிடையே உலவுகின்றன. அதில் ஒன்று , அக்குப்பங்சர் என்பது ஒரு மருத்துவமா ? சிலர் , அக்குபங்சரை சந்தேகக் கண்கொண்டே பார்க்கிறார்கள். ஏதோ ஏமாற்று வேலை என நினைக்கிறார்கள் போலும்.
அக்குபங்சர் ஒரு மருத்துவ முறையா என்ற ஐயப்பாடு எழுவதற்கு ஒரு காரணம் , அதில் மருந்துகள் / மாத்திரைகள் / டானிக்குகள் எதுவும் தரப்படுவதில்லை. பிறகு எப்படி நோய் குணமாகும் என்பதே வினா. மருந்துகள் , மாத்திரைகள் கொடுத்துத்தான் நோய்களை குணமாக்க வேண்டும் என்பதில்லை. அந்த வைத்திய முறை நோய்களை குணமாக்குகிறதா என்பதே நாம் கவனிக்க வேண்டியது.
வேதாத்திரி மகரிஷி அவர்கள் மருந்து என்பதற்கு ஒரு எளிய விளக்கம் தருகிறார் . மருவி + உந்து என்பதே மருந்து. நாம் கொடுக்கும் மருந்துப்பொருள் , உடலில் ஜீரணமாகி , உடலோடு கலந்து (மருவி ) நோயை குணமாக்குகிறது. உடலோடு மருவி, இயற்கையான உடல் சக்தியோடு கலந்து உந்தும் பொருளே மருந்து என்பதே அவர் தரும் விளக்கம்.
இந்த பிரபஞ்சம் முழுவதும் , நாம் காணும் எந்தத் தோற்றங்கள் / பொருட்கள் என்றாலும் அவை ” ஆற்றல் , பருப்பொருள் ” ( Energy and Matter ) என்ற இரண்டைத் தவிர எதுவுமில்லை என்பது விஞ்ஞானிகளின் முடிவு. அந்த இயற்கையான ஆற்றலைக் கொண்டு , உடலில் ரசாயன மாற்றங்களையும் , பொருள் நிலையில் ( உறுப்புகளில் ) மாற்றங்களையும் கொண்டு வந்து , நோய்களை குணமாக்கும் ஒரு வியத்தகு கலையே அக்குபங்சர் ஆகும். இது சீனாவில் உருவானது. இதே சாயல் கொண்ட , வர்ம சிகிச்சையும் முன்பு தமிழ்நாட்டில் நிலவியது.

அக்குபங்சர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை , அது அறிவியல் பூர்வமானது இல்லை ( pseudo science ) என்று சில நண்பர்கள் என்னிடம் வாதிடுகிறார்கள். முதலில் என்னுடைய கேள்வி , அறிவியல் என்றால் என்ன ? என்பதை யாராவது அறிந்து வைத்திருக்கிறார்களா ?
அறிவியல் என்றால் என்ன ? மனித அறிவைக் கொண்டு அறியக் கூடியது தான் அறிவியல். ஒரு தெளிவான வரையறைக்குள்ளும் , விதிகளுக்கு உட்பட்டும் ( within boundaries and principles ) இயங்கக்கூடியது தான் அறிவியல். அந்த வரையறைகள் , விதிகள் எப்போதும் மாறாமல் ( consistency ) இருக்க வேண்டும். மீண்டும் மீண்டும் அதே விளைவுகளைத் தர வேண்டும் ( reliability ) . பலமுறை , பல காலங்கள் கழித்து சோதனை செய்தாலும் – ஒரே மாதிரி இருக்க வேண்டும். அறிவியல் அறிஞர்கள் அவரசரப்பட்டு முடிவெடுக்க கூடாது , உணர்ச்சிவசப்பட்டு ஒருதலை பட்சமாக ( unbiased and open minded ) முடிவெடுக்க கூடாது. திறந்த மனதுடன் ( receptive to new ideas ) புதிய உண்மைகளை அணுக வேண்டும்.
இப்போது ஒரு அக்குபங்சர் புள்ளியை எடுத்துக் கொள்வோம். ST – 45 என்ற அக்குபங்சர் புள்ளி இருக்கிறது. இப்புள்ளி இரைப்பையையும் , பெருங்குடலையும் இணைத்து இயங்க வைக்கிறது. ஒரு 100 நபர்களை தேர்வு செய்து , இந்தப் புள்ளியில் மென்மையான அக்குபங்சர் தூண்டுதல் அளித்து , அவர்களுக்கு :

” இரைப்பையிலும் , பெருங்குடலில் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்கின்றனவா , ஏதேனும் இயக்க மாற்றங்கள் நிகழ்கின்றனவா , வேதியியல் மாற்றங்கள் நிகழ்கின்றனவா , உதாரணமாக – காற்று பிரிவதில் , மலம் கழிப்பதில் , பசியுணர்வில் மாற்றங்கள் நிகழ்கின்றனவா போன்ற மாற்றங்கள் இவற்றை நவீன கருவிகளைக் கொண்டே பரிசோதித்து பார்த்து விடலாமே ?
தற்போதுள்ள மருத்துவ தொழில்நுட்ப வளர்ச்சியில் , நுணுக்கமாகக் கூட மேற்கண்ட மாற்றங்களை ஆராய்ந்து விடலாமே ? “
நிச்சயமாக , அக்குபங்சர் என்பது ஒரு மருத்துவத்திற்கு உரிய தகுதி ( deserving ) பெற்றதுதான். அதற்கான ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். எந்த ஒரு நோயையும் , மருந்துகள் இல்லாமல் , குணமாகும் சாத்தியக்கூறுகள் அக்குபங்சரில் நிச்சயமாக உண்டு.
I believe