About Us
ப. லிங்கேஸ்வரன்
ப. லிங்கேஸ்வரன் , மேலாண்மைத் துறையில் ( MBA ) உதவி பேராசிரியராக பல ஆண்டுகள் பணியாற்றியவர். அவர் இதுவரையில் , உளவியல் , இளைஞர் வழிகாட்டுதல் , தாம்பத்தியம் , வேதாத்திரிய தத்துவம் , அக்குபங்சர் போன்ற தலைப்புகளில் 5 புத்தகங்கள் எழுதியவர்.
ப. லிங்கேஸ்வரன், திருச்சி NIT (REC)-ல், 2003-ம் ஆண்டு பொறியியல் முடித்தவர். IIT Madras, IIT Delhi போன்ற கல்வி நிறுவனங்களிலிருந்து Positive Psychology, Happiness and Well being, Leadership, Research Methodology, Industrial Safety போன்ற பிரிவுகளில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் (Certifications) பெற்றவர்.
தற்போது அவர் – ஆற்றல் மருத்துவத்தை ( Energy based ) அடிப்படையாகக் கொண்டு செயல்படும் அக்குபங்சர் சிகிச்சை மற்றும் உயிராற்றல் பயிற்சிகள் [Acupuncture and Bio energetic therapy] மூலம் பல்வேறு விதமான நோய்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார். இந்த இரண்டு பிரிவுகளிலும் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்.
கல்வி மற்றும் சான்றிதழ்கள்:
யோகாவில் முதுகலை பட்டமும் (M.A Yoga for Human Excellence), Full time MBA-வும் முடித்தவர். 10 ஆண்டுகளுக்கு மேலாக உதவி பேராசியராக மேலாண்மைத் துறையில் (Management Studies) பணியாற்றியவர். சிறு வயதிலிருந்து தத்துவத்திலும், யோகாவிலும் பரிச்சயம் உள்ளவர். கிட்டத்தட்ட 15 வருடங்கள் யோகா கற்றுத் தருவதில் அனுபவம் உள்ளவர். யோகா மட்டுமல்லாமல், உளவியலில் (Expertise in Psychology) நிபுணத்துவம் பெற்றவர். ஏராளமான உளவியல் கட்டுரைகள் எழுதி, அவை நூலாக தொகுக்கப்பட்டுள்ளன. யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்களின் சீடரான லிங்கேஸ்வரன், மகரிஷி அவர்களை பற்றி ஒரு மிகச் சிறந்த நூலை எழுதியுள்ளார்.
ஆராய்ச்சி மற்றும் அக்குபங்சர் சேவை
நேர்மறை உளவியல் , தலைமைப்பண்புகள் ஆகியவற்றைப் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிட்டுள்ளார்.
டாக்டர். பஸ்லுர் ரகுமான் ( MBBS., MD., Ph.D acu ) அவர்களின் நூல்களால், அக்குபங்சர் சிகிச்சையில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டு , முறையாக பல்கலைகழகம் வாயிலாக அக்குபங்சர் (Dip. in Acupuncture) பயின்று – எண்ணற்ற மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.