kplingeswaran.in

அக்குபங்சர் மருத்துவம் – உண்மை என்ன ?

அக்குபங்சர் சிகிச்சை எல்லா மருத்துவ முறைகளையும் விட ஒருபடி உயர்ந்தது. மருந்துகள் இதில் அளிக்கப்படுவது இல்லை என்பது ஒரு முக்கிய காரணம் என்றாலும், மிக முக்கிய காரணம்  ” பிரபஞ்ச சக்தியின் ( cosmic rays ) துணை  கொண்டு நோய்கள் குணப்படுத்தப்படுவதால் – அக்குபங்சர் ஓர் உயர்தரமான , தூய சிகிச்சை முறையாகும் ” .

பொதுவாக, மக்களின் மனோபாவத்தை பார்க்கும் போது, அக்குபங்சருக்கு அவ்வளவாக மதிப்பில்லை.  ஒரு காரணம் போதிய விழிப்புணர்வு இல்லை. ஒரு சிலர், சிறிது முயற்சி எடுத்து கூட அதை புரிந்து கொள்ள முனைவதில்லை.

மக்களில், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அக்குபங்சர் மருத்துவத்தைப் பற்றி சிந்திக்கிறார்கள். சிலர் ஏதோ மாய மந்திரத்தால் குணமாக்குவது போலவும் – சிலர் நரம்புகளை தூண்டி விட்டு நோய்களை குணமாக்குவதாகவும் – நம்பிக்கையின் (placebo effect) மூலம் குணமாவதாக சிலரும் – விதவிதமாக அக்குபங்சரை எடை போடுகிறார்கள். இவை அனைத்தும் தவறான கண்ணோட்டங்களே.

பிரபஞ்ச சக்தி என்றாலே அதை  ” போலி அறிவியல் ”  ( pseudo science ) என்று சிலர் கருதுகிறார்கள். பிரபஞ்ச சக்தி என்றால் வேறொன்றுமில்லை , நமது சுற்றுப்புறத்தில் உள்ள காற்றுமண்டலம் , வான் வெளியில் பாய்ந்து கொண்டிருக்கும் பல்வேறு அலைநீளங்கள் ( cosmic rays with different wave lengths ) கொண்ட கதிர்வீச்சுக்கள் , சூரிய வெளிச்சம் , நிலாவிலிருந்து வரும் குளிர்ச்சி மற்றும் கணக்கிலடங்கா கோள்களிருந்து பூமியை வந்தடையும் கோள்களின் கதிர்வீச்சுக்கள் ( radiations ) – இவை அனைத்தையும் உள்ளடக்கியே  ” பிரபஞ்ச சக்தி ” என்ற வார்த்தை கையாளப்படுகிறது.

பிரபஞ்ச சக்தியும் , மனித உடலில் ஓடிக் கொண்டிருக்கும் சக்தியும் எப்போதுமே இடைவிடாது பிணைக்கப்பட்டு இயங்குகின்றன என்பதே  அக்குபங்சரின் அடிப்படையாகும். மனித உடலை இயக்கும் சக்தியை  ” ஜீவகாந்தம் ” என்றும் , பிரபஞ்சம் முழுக்க இயங்கும் காந்த சக்தியை  ” வான் காந்தம் ” என்றும் வேதாத்திரி மகரிஷி குறிப்பிடுகிறார். மேலும் , ஜீவகாந்தமும் வான்காந்தமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதபடி, ஒன்றால் ஒன்று இயக்கம் பெற்றும் இயங்குகின்றன ( inseparable, interacting with each other at any given moment ) என்றும் விளக்கி உள்ளார்.

நோய்களால் துன்பப்படுகிறவர்கள் கூறும் தொந்திரவுகளில் இருந்தும், அவர்களின் நாடியை பரிசோதித்தும் – பஞ்சபூதங்களில் எந்த ரீதியில் சீர்குலைவு , சமநிலை ( imbalance )குலைவு ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்றவாறு – மனித உடலில் தோலின் மேல் ஓரிரு புள்ளிகளில் மென்மையான அழுத்தம் தருவதன் மூலம் – பிரபஞ்ச சக்தியையும், ஜீவகாந்த சக்தியையும் ஒருங்கிணைப்பதன் ( integrating human beings with nature )  மூலம் – பஞ்சபூதங்கள் மீண்டும் படிப்படியாக சமநிலைக்கு வருகின்றன. நோயாளி என்னென்ன பிரச்சனைகளால் அவதிப்பட்டாரோ அவை படிப்படியாக நிவர்த்தியாகி, ஒரு கட்டத்தில் முழுமையாக குணமாகிறார்.

Scroll to Top