kplingeswaran.in

Services

கணவன் மனைவி தாம்பத்தியம்

கணவன் மனைவி இருவருக்கும் இடையில் ஏற்படும் பிரச்சனைகள் , சிக்கல்கள் , கருத்துப் பிணக்குகள் , சண்டைகள் , வாக்குவாதங்கள் போன்றவை எல்லாம் உலகளாவிய பிரச்சனைகள் .

சண்டைகள் , அதிருப்திகள் இல்லாத கணவன் மனைவியே உலகில் கிடையாது . வேண்டுமானால் , எதுவும் இல்லாதது மாதிரி நடிக்கலாம், காட்டிக் கொள்ளலாம்.

கணவன் மனைவி பிரச்சனைகளுக்கு அடிப்படைக் காரணம் , இருவருக்கும் பாலுறவில் திருப்தியின்மை என்பதே பரவலாக நிபுணர்கள் கூறும் கருத்து . இது ஓரளவு உண்மை தான் .

ஆனால் , முற்றிலும் உண்மை அல்ல. பாலுறவை விட – ஆழமான , நுணுக்கமான பல உளவியல் சிக்கல்கள் அதற்கு காரணமாக அமைந்துள்ளன என்பதே நான் ஆராய்ச்சியில் கண்ட முடிவு ஆகும்.

என்னுடைய கட்டுரைகளை தொடர்ந்து படித்து வாருங்கள். வீடியோக்களை தொடர்ந்து கேளுங்கள் . படிப்படியாக விடை கிடைக்கும் .

ஒரே மூச்சில் தீர்வுகளை கூற முடியாது . அப்படிக் கூறினாலும் உங்களால் உள்வாங்கிக் கொள்ள முடியாது . படிப்படியாக புரிந்து கொள்வதே சிறந்தது.

உயிராற்றல் பயிற்சிகள்

Dr. Alexander Lowen எனும் உளவியல் நிபுணர் மற்றும் மனநல மருத்துவராக விளங்கிய என்பவரால் உருவாக்கப்பட்டவையே  Bio energetics எனப்படும் உயிராற்றல் பயிற்சிகள் ஆகும் .

மனநல மருந்துகள் மூலமாகவே மனநல பிரச்சனைகளை குணமாக்க முடியும் , கட்டுப்படுத்த முடியும் என மருத்துவ உலகம் கூறி வந்த சமயத்தில் – ஒரு வித்தியாசமான , புரட்சிகரமான ( revolutionary perspective ) கோட்பாட்டை முன்வைத்தார்.

மனதின் மூலமாக்கமனதை சரி செய்ய முடியாது . மருந்துகள் மூலம் மனதை சரி செய்ய முடியாது .

எந்த ஒரு மன நலம் சார்ந்த பிரச்சனையும் – மனித உடலில் , தசைகளில் , உருவ அமைப்பில் , நம்முடைய நடை உடை பாவனைகளில் தங்களின் சுவடுகளை ( muscular rigidity and tensions ) விட்டுச் செல்கின்றன .

உடலின் மூலமாக மனதை அணுகி – அதாவது பிரத்யேகமான பல உடல் அசைவுகளை , உடற்பயிற்சிகளை ( bio energetic excercises ) செய்வதன் மூலம் – மனப்பிரச்னைகளை அதன் அடிப்படை உணர்ச்சிகளை ( releasing the suppressed emotions ) வெளிக்கொணர்ந்து , ஆற்றல் வடிவில் அவற்றை வெளியேற்றி குணமாக்குவதே இப்பயிற்சிகள் சிறப்பம்சம் ஆகும் .

ஒரு மனிதன் பிறந்ததலிருந்து அவனுக்கு ஏற்படும் மனக்காயங்கள் , விரக்தி , இயலாமை , ஏமாற்றங்கள் , வெளிப்படுத்தா கோபங்கள் , தனிமை உணர்வு போன்றவை உடலில் பதிந்துள்ளன . இவை எல்லாம் உணர்ச்சிகள். மனதை மனம் மூலமாகவே அணுகாமல் , கண்ணுக்கு தெரிந்த உடல் மூலம் அணுகுவதே சரியான அணுகுமுறை ஆகும் .

உயிராற்றல் பயிற்சிகள் மூலம் மனநோய்களை குணமாக்குவது சற்று காலம் பிடிக்கும். இருந்தாலும் , எந்த மருந்துகளும் இல்லாமல் , குழப்பமான செய்முறைகள் இல்லாமல் – குணமாக்கும் ஒரு உத்தரவாதமான வழிமுறை ஆகும்.

அக்குபங்சர்

அக்குபங்சர் சிகிச்சை முறையைப் பற்றி பெரும்பாலான மக்களுக்கு சரியான விழிப்புணர்வும், புரிதலும் இல்லை . சிறிய உடல் உபாதைகளை , உதாரணமாக தலைவலி , உடல் வலி, மூட்டு வலிகள் , இவை போன்றவற்றை மட்டுமே அக்குபங்சரால் தீர்க்க என மக்கள் நினைக்கிறார்கள் . இது தவறான புரிதல் ஆகும் .

அக்குபங்சர் சிகிச்சை மூலம் – நாட்பட்ட நோய்களையும் ( chronic diseases )  , மிகக் கடுமையான நோய்களையும், கைவிடப்பட்ட நோய்களையும் ( abandoned cases )  கூட – குணமாக்கும் சாத்தியக் கூறுகள் அக்குபங்சரில் உண்டு.

அக்குபங்சர் எவ்வாறு வேலை செய்கிறது ?

மனித உடலில் காந்த ஆற்றல் , உணர்வாக ஓடிக் கொண்டே இருக்கிறது . இந்த மனித காந்த சக்தியானது , சுற்றுப்புறத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் காந்த சக்தியோடு ( எண்ணற்ற அதிர்வெண் , அலைநீளம் கொண்ட அலைகளோடு ) எப்போதும் தொடர்பு கொண்டே இயங்குகிறது . நம்முடைய முறையற்ற பழக்க வழக்கங்களால் , வாழ்க்கை முறையால் , தவறான உணவு முறையால் இந்த தொடர்பு அறுந்து போகும்போது – குறிப்பிட்ட உறுப்புகளில் நோய்கள் உண்டாகின்றன .

அக்குபங்சர் சிகிச்சையில் – குறிப்பிட்ட சில அக்குபங்சர் புள்ளிகளை தேர்வு செய்து அவற்றை மென்மையாக தூண்டும்போது – மீண்டும் மனித உடல் , பிரபஞ்ச காந்த சக்தியோடு – தான் இழந்த தொடர்பை மீண்டும் பெற்று நோய்கள் படிப்படியாக குணமாக ஆரம்பிக்கின்றன .

சில நேரங்களில் அக்குபங்சர் என்ற பெயருக்கு பதில் , அக்குபிரஷர் என்ற பெயரும் பயன்படுத்தப் படுகிறது . எனினும் , அக்குபங்சர் அக்குபிரஷர் இரண்டும் ஒரே தத்துவத்தின் அடிப்படையிலேயே இயங்குகின்றன .

எந்தெந்த நோய்களை அக்குபங்சர் மூலம் குணமாக்க முடியும் ? [ Conditions / disease treated through acupuncture ]

அக்குபங்சர் தத்துவத்தில் , நோய்களுக்கு பெயரிட்டு அழைக்கும் வழக்கம் இல்லை. இருந்தாலும் , நோயாளிகளின் புரிதலுக்காக எந்தெந்த நோய்களை எல்லாம் குணமாக்கும் சாத்தியம் உள்ளன என்ற பட்டியல் கீழே தரப்படுகிறது : –

  1. நாட்பட்டதலைவலி  (migraine)
  2. இடுப்புவலி , முதுகு வலிகள் , மூட்டு வலிகள் 
  3. இதயபடபடப்பு (palpitation)
  4. பதட்டம், பயம் , மனச்சோர்வு (anxiety, fear, depression)
  5. ஆஸ்துமா, இளைப்பு , சைனஸ் 
  6. தைராய்டு
  7. மாதவிலக்குபிரச்சனைகள் (menstrual issues)
  8. PCOD
  9. கல்லீரல்வீக்கம் , பித்தப்பை கற்கள் 
  10. சிறுநீரககற்கள் ( kidney stones)
  11. சிறுநீரகசெயலிழப்பு (kidney failure)
  12. செரிமானகோளாறுகள் 
  13. தூக்கமின்மை(insomnia)
  14. உடல்பலகீனம் (chronic fatigue and weakness)
  15. ஆண்மைக்குறைவு (impotency)
  16. தோல்நோய்கள் (skin diseases)
  17. Auto immune disorders
  18. நரம்புதளர்ச்சி (nervous debility)
  19. மூலம், பௌத்திரம் , கடுமையான மலச்சிக்கல் , IBS
  20. குழந்தைகளுக்கானஉடல் நலம் 
Scroll to Top