
நம்மில் பெரும்பாலானோர் – யதார்த்த ( reality ) உலகில் இருந்து முற்றிலும் வேறுபட்ட – ஒரு கற்பனை உலகில் , போலியான நம்பிக்கைகளில் வாழ்கிறோம் என நினைக்கிறேன். இதை உளவியல் நிபுணர்கள் illusions என அழைக்கிறார்கள் . நமக்குள் ஏராளமான illusion- கள் இருக்கின்றன . எல்லோர்க்கும் புரியும் படியாக சில உதாரணங்கள் கூறினால் , பளிச்சென புரியும் .
உதாரணம் 1
ஒரு இளைஞன் தான் காதலிக்கும் பெண்ணை மணந்தவுடன் , வாழ்க்கை முற்றிலும் மாறி விடும் என நம்புவது அல்லது ஒரு பெண்ணை மணந்தவுடன் வாழ்க்கை மாறி விடும் என நம்புவது .
உதாரணம் 2
கல்லூரி படித்து முடித்தவுடன் , நல்ல வேலை கிடைத்து , வாழ்க்கை ஆகா ஓஹோ என மாறி விடும் என நினைப்பது
உதாரணம் 3
நிறைய சொத்துக்களை சேர்த்து வைத்து விட்டால் , நம் எதிர்காலம் நிச்சயமான தன்மையுடன் ( certainty in future ) , உத்தரவாதமாக மாறி விடும் என நம்புவது
உதாரணம் 4
ஒருநாள் நம் வாழ்க்கை நிச்சயமாக மாறும் என பொத்தாம் பொதுவாக நம்பிக் கொண்டிருப்பது .
இதுபோன்ற போலியான நம்பிக்கைகள் ( illusions ) நம் உடலுக்கும் , மனதுக்கும் ஆபத்தானவை . ஏனெனில் , அவற்றை பொறுத்தே நம்முடைய முடிவுகள் , திட்டமிடல் , செயல்கள் ( Decision making , Planning and Actions ) அமைவதால் – நிச்சயம் நாம் ” ஏமாற்றம் , மனச்சோர்வு , விரக்தி , மன அழுத்தம் ( Disappointments, Frustration , Stress , Depression ) மற்றும் பலவிதமான உடல்ரீதியான கோளாறுகள் ( psychosomatic disorders ) ” போன்றவற்றால் பாதிக்கப்படுவது உறுதி .