உங்கள் மனதில் தோன்றும் ஆர்வங்களை, விருப்பங்களை சற்று உன்னிப்பாக கவனித்திருக்கிறீர்களா ?
மனதில் தோன்றும் விருப்பங்களுக்கும் , நமக்கு ஏற்படும் மன அழுத்தத்திற்கும் , வாழ்க்கையின் மேல் உண்டாகும் விரக்திக்கும் ( frustration ) ஒரு நேரடித் தொடர்பு உண்டு என்பதைப் பற்றி நீங்கள் யோசித்திருக்கிறீர்களா ?
ஆம். நிச்சயம் உண்டு.
நம் விருப்பங்களைப் பொறுத்தவரை நாம் செய்யும் மிகப் பெரிய தவறு என்னவெனில் – அவற்றை நாம் உருவாக்குகிறோம் என தவறாக நினைப்பதே . விருப்பங்கள் என்பவை ஒரு மனிதனுக்கு – எந்த முயற்சியும் செய்யாமல் – தானாக உருவாக்கம் ( autonomous function ) பெறுபவை ஆகும். வேறு வார்த்தைகளில் சொன்னால் , இயற்கையே அந்தந்த மனிதனுக்கு வழிகாட்டுவதன் பொருட்டு – அவர் மனதில் விருப்பங்களை தோற்றுவிக்கிறது . விருப்பங்களை செயலில் கொண்டு வருவதற்குத் தான் , நம் முயற்சி தேவைப்படுகிறது .

உங்கள் மனதில் தோன்றும் விருப்பங்களை – நீங்கள் குறிக்கோள்கள் என அழைக்கலாம் , இலக்குகள் என அழைக்கலாம் , ஆங்கிலத்தில் Passion , Interests என்று அழைக்கலாம் . அது எந்த வார்த்தையானாலும் அதன் பொருள் ஒன்றுதான் . மரபணு அறிவியலில் ( Genetics ) கூறப்படும் Natural Selection என்ற கருத்தை நீங்கள் இதனோடு ஒப்பிட்டு பாருங்கள் .
இயற்கை என்பது மிக வலுவானது (equilibrium) . எனவே, இயற்கையால் தோற்றுவிக்கப்படும் உங்கள் ஆசை நிறைந்த எண்ணங்களை (விருப்பங்களை) செய்யாமல் விட்டு விட்டால் அவை எங்கேயும் மறைந்தோ , கரைந்தோ போய் விடாது. ஆழ்மனதில் அடங்கி ( suppressed emotions ) கிடந்து , இதயத்தை நிம்மதியாக உறங்க விடாது . மனதில் ஒரு நிறைவின்மை (dissatisfaction ) , சலிப்பு ( boredom ) , விரக்தி (frustration) , வெறுப்பு போன்றவை இருந்து கொண்டே இருக்கும் .
ஆகவே , நீங்கள் எப்போதும் – முடிந்தவரை – உங்கள் விருப்பத்தின் வழியே செயல்படுங்கள். யாருக்கும் பாதிப்பில்லாமல் செயல்படுங்கள் . மனம் அமைதி பெறும் , நிறைவு உண்டாகும். இயற்கை எனும் மாபெரும் இயக்கத்தோடு ஒன்றுபட முயற்சி செய்யுங்கள் .