kplingeswaran.in

மது குடிப்பதால் எந்த உறுப்பு முதலில் பாதிப்படையும் ?

    மதுவை தொடர்ந்து குடிப்பதால் கல்லீரல் பாதிக்கப்படும் என பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் . 

    ஆனால் , உண்மையில் மதுவால் வயிறு ( இரைப்பை ) தான் முத‌லி‌ல் பாதிப்பிற்கு உள்ளாகும் . இரைப்பை என்பது ஒரு சதைப்பை . அதனால் மதுவால் ஏற்படும் எரிவு நிலையை ( irritating feeling ) தாங்க முடியாது . 

    இரைப்பை என்பது , உணவை செரிப்பதற்காக சுருங்கி விரியக் கூடியது . அதன் உட்புறத்தில் பல ஜீரண என்சைம்கள் சுரக்கும் . அக்குபங்சர் தத்துவத்தில் , வயிறு என்பது கவலை என்ற உணர்ச்சிக்கு உரியது . 

    இரைப்பை பாதிக்கப்படும்போது , கவலை / பொறுமையின்மை / மன அழுத்தம் போன்றவை அதிகமாகும் . இந்த மனநிலைகள் அதிகமாக அதிகமாக , இரைப்பை மேலும் பாதிப்புக்கு உள்ளாகும் . ( vicious cycle )

    இதற்கு அடுத்த கட்டத்தில் தான் , கல்லீரல் சேதமடைய துவங்கும் . 

    நோயாளி பொறுமையும் , ஒத்துழைப்பும் கொடுத்தால் – அக்குபங்சர் சிகிச்சை மூலம் படிப்படியாக இதை குணமாக்கி விட முடியும் .

    அக்குபங்சர் மருத்துவம் , மனித உடலில் எப்படி வேலை செய்து நோய்களை குணமாக்குகிறது என்பதை புரிந்து கொள்ள பொது மக்கள் சிரமப்படுகிறார்கள். அக்குபங்சர் மிக எளிதானது தான் . 

    உதாரணமாக , Lr – 2 என்று ஒரு அக்குபங்சர் புள்ளி . இந்தப் புள்ளியில் மென்மையாக அழுத்தம் தரும்போது , ” கல்லீரல் மற்றும் இதயம் ” என்ற இரண்டு உறுப்புகளும் இயக்கம் பெற துவங்குகின்றன . 

    ஒவ்வொரு முக்கிய உறுப்பும் , ஒரு துணை உறுப்புடன் இயங்குகிறது . 

    எனவே , Lr – 2 என்ற புள்ளியை தூண்டும் போது ” கல்லீரல் , இதயம் , சிறுகுடல் , பித்தப்பை ” என்ற நான்கு உறுப்புகளும் ஒரே நேரத்தில் உயிரோட்டம் பெற்று செயல்பட துவங்குகின்றன .

    1 thought on “மது குடிப்பதால் எந்த உறுப்பு முதலில் பாதிப்படையும் ?”

    Comments are closed.

    Scroll to Top