kplingeswaran.in

முகப் பொலிவின் அக்குபங்சர் ரகசியம் !

சோப்பு தேய்த்து குளிப்பது, விதவிதமான கிரீம்கள் போடுவது , பலவிதமான ஒப்பனை முறைகள் இவற்றால் தான் “முகம்” பளபளக்கிறது என பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள். அது உண்மை அல்ல.

இதற்கான தெளிவான பதில், அக்குபங்சரில் இருக்கிறது.

சிறுகுடல், பெருங்குடல், இரைப்பை, சிறுநீர்ப்பை, மூவெப்ப மண்டலம், பித்தப்பை ஆகிய முக்கிய உறுப்புகளின் சக்தி ஓட்டப் பாதைகள் ( அக்குபங்சர் புள்ளிகள் / meridians ) , முகத்தில் தான் முடிகின்றன அல்லது துவங்குகின்றன. இப்புள்ளிகள் வாயிலாக பிரபஞ்ச சக்தியை ( சுற்றுப்புறத்திலிருந்து ) அந்தந்த உறுப்புகள் ஈர்க்கின்றன ( rays of different frequency and wave length ) .

சோப்புகள் , கிரீம்கள், செயற்கையான திரவியங்கள், பவுடர் இவற்றால் முகத்தில் உள்ள அக்குபங்சர் புள்ளிகள் பாதிப்புக்கு உள்ளாகின்றன. காலப்போக்கில் , முகத்தின் இயற்கை அழகு கெடுவதோடு மட்டுமல்லாமல், உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

எனவே, கண்டிப்பாக எந்த ஒரு செயற்கையான பொருளையும் முகத்தில் போட கூடாது. அதற்கு பதிலாக, கர்சீப் அல்லது மெல்லிய துண்டைக் கொண்டு முகத்தில்/ கழுத்தில் உள்ள எண்ணெய் பசையை துடைத்து விட்டு – நீரால் முகத்தை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும் . இவ்வாறு ஒரு நாளில் பலமுறை கூட முகம் கழுவலாம்.

இயற்கை அழகுக்கு நிகர் எதுவுமில்லை. மேக் அப் இல்லாமல் நடிகர் நடிகைகளை காண சகிக்காது என்பது நீங்கள் அறிந்தது தானே ?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top