மண்ணீரல், அக்குபங்சரில் பஞ்சபூதங்கள் என அழைக்கப்படும் நிலம் மூலகத்தின் உறுப்பாகும் .

நிலத்தை நாம் ” பூமித் தாய் ” , ” அன்னை பூமி ” , ” பூ மாதா ” , ” அகழ்வாரை தாங்கும் நிலம் போல ” – என பலவாறு உருவகப்படுத்துகிறோம் .
பூமியானது , நாம் நிற்பதற்கு இடம் கொடுப்பதோடு அல்லாமல், உயிர்களுக்கு தேவையான உணவை வழங்குகிறது .
அப்படியே, இதே போலவே, நிலம் மூலக உறுப்பாகிய மண்ணீரலும் – நம் உடல் நலத்திலும் , மன நலத்திலும் – மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது .
மண்ணீரலுக்கு உயிரோட்டம் அளிக்காமல், எந்த ஒரு நோயையும் குணமாக்குவது மிக மிக கடினம். சிறந்த அக்கு ஹீலர்களாக திகழ விரும்புகிறவர்கள், ” SP – 3, SP -5 ” போன்ற புள்ளிகளின் முக்கியத்துவத்தை நன்கு அறிந்திருக்க வேண்டும் .