
ஒரு அக்குபங்சர் சிகிச்சையாளராக இந்தக் கேள்வியை அடிக்கடி எதிர்கொள்கிறேன் . யோகா, ஜிம் பயிற்சிகள் , பலவித உணவு முறைகள் இவற்றை எல்லாம் முயற்சி செய்து கடைசியில், சோர்ந்து போய் வருவார்கள்.
அவர்களுக்கு நான் வழக்கமாக தரும் பதிலை கீழே தருகிறேன்
அக்குபங்சரில் உடல் எடையை குறைக்க என்று தனியாக சிகிச்சை கிடையாது. மனித உடலில் மொத்தம் 12 முக்கிய உறுப்புகள் ( 6 ராஜ உறுப்புகள் + 6 துணை உறுப்புகள் ) உள்ளன.
இந்த உறுப்புகளின் இயக்கம் குறையும்போது , அதாவது அவற்றில் உயிரோட்டம் ( vital energy circulation ) குறையும்போது – அந்தந்த உறுப்புகள் சோர்வாக ( inefficient functioning ) இயங்க ஆரம்பிக்கின்றன. ஒருவரின் உடல், பருமன் ஆகிறதென்றால் – அது திடீரென ஒரு நாளில் நடந்து விடுவதில்லை.
பல நாட்கள் , பல மாதங்கள் , பல வருடங்கள் படிப்படியாக ( gradually increasing ) உடல் எடை அதிகரிக்கிறது.
12 உறுப்புகளில், சிலவோ பலவோ , போதுமான உயிரோட்டமின்றி களைப்பாக இயங்க ஆரம்பிக்கும்போது – மனித உடல் அமைப்பு தன் கச்சிதமான நிலையிலிருந்து மாற ஆரம்பிக்கிறது. அந்த சூழ்நிலையில் , உடல் குண்டாகவும் செய்யலாம் அல்லது மெலியவும் செய்யலாம் .
எனவே , உங்களின் உடல் எடையை அக்குபங்சர் மூலம் குறைக்க வேண்டுமென்றால் – தற்போது உங்கள் உடலிலுள்ள தொந்திரவுகளை ஒவ்வொன்றாக சரி செய்து , உள்ளுறுப்புகளை உயிரோட்டத்துடன் இயக்கி விட்டால் உடல் எடை தானாகவே குறைய வாய்ப்புள்ளது.
இதற்கு பல மாதங்கள் அல்லது ஓரிரு வருடங்கள் ஆகலாம். எந்த ஒரு பிரச்சனையும் படிப்படியாகத் தான் குறையும். உடல் நோய்கள் தொடர்பான விஷயத்தில், பொறுமையிழந்து உடனே குணமாக வேண்டும் என்ற எண்ணம் அறிவுடைமை அல்ல.