kplingeswaran.in

ஒரே ஒரு அக்குபங்சர் புள்ளியில் (ஒற்றைப் புள்ளி சிகிச்சை) நோய்கள் குணமாவது எப்படி ?

தோலின் மேல் ஒரே ஒரு புள்ளியில் , விரல் நுனியால் தொடுவதன் மூலமாகவோ, அல்லது அக்குபங்சர் ஊசி மூலம் தொடுவதன் மூலமாகவோ – நோய்கள் எப்படி குணமாக முடியும் என்பது பெரும்பான்மையான மக்களுக்கு புரியாத புதிராகவே இருக்கிறது.

அக்குபங்சர் என்ற சிகிச்சை முறை – குறிப்பிட்ட சில தத்துவங்களின் அடிப்படையிலும், விதிகளின் ( scientific laws )அடிப்படையிலும் செயல்படுகிறது. அந்த தத்துவங்கள் எக்காலத்திலும் மாறாதவை ( immutable ) . நிலையானவை. அறிவியல் பூர்வமாக நிறுவக்கூடிய , சாத்தியக் கூறுகள் உள்ளவை.

வர்மக்கலையில் , உடலின் ஏதேனும் ஒரு வர்மப் புள்ளியில் அடித்தால் – கைகால்களை முடக்க முடியும் என்றும் , ஆளை நடக்க விடாமல் செய்ய என்றும் கூறுகிறார்கள்.  உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட வர்மப் புள்ளியில் அடித்தால் – ஆள் பன்றி போல உறுமுவானாம். ஒரு குறிப்பிட்ட புள்ளியில் அடித்தால், சொட்டு சொட்டாக சிறுநீர் வடியுமாம். ஒரு குறிப்பிட்ட புள்ளியில் அடித்தால் , கண்கள் நிலைகுத்தி நின்று விடுமாம். இன்றளவும், வர்ம ஆசான்கள் இதை உறுதிப்படுத்துகிறார்கள்.

இது உண்மையென்றால் , அதாவது ஒரே ஒரே வர்மப் புள்ளியில் தாக்கி ஆளை நிலைகுலைய வைக்க முடியும் என்றால் , கை கால்களை முடக்க முடியும் என்றால் – ஒரே ஒரு அக்குபங்சர் புள்ளியில் மென்மையாக சிகிச்சை அளித்து எந்த ஒரு நோயையும், குணமாக்க முடியும் என்பதுவும் சாத்தியமே. 

ஒற்றைப் புள்ளி அக்குபங்சர் என்பது மரபுவழி அக்குபங்சர் என்றும் , பாரம்பரிய அக்குபங்சர் என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் classical acupuncture என அழைக்கப்படுகிறது . 

அக்குபங்சர் சிகிச்சை என்பது , நோய்களை குணமாக்குவதற்காக , உடலின் மேற்புறத்தில் மெல்லிய ஊசிகளை சொருகி அல்லது விரல் நுனியால் தொட்டு , உடல் உறுப்புகளுக்கு உயிரோட்டம் அளித்து குணமாக்கும் ஒரு முறையாகும் . இதில் , உடலில் நான்கு இடங்களில் , ஐந்து இடங்களில் , ஏன் இடங்களில் 10  இடங்களில் அக்குபங்சர் ஊசிகளால் தூண்டி சிகிச்சை அளிக்கும் முறை தற்போது பரவலாக பின்பற்றப்படுகிறது . 

Acupuncture treatment being administered on person’s wrist in serene environment

ஆனால் ,  இதை விட சிறந்த முறை : ஒரு நோயாளி எத்தனை தொந்திரவுகளை சொன்னாலும் – அவை 10 தொந்திரவுகள் ஆகட்டும் ,  100 தொந்திரவுகள் ஆகட்டும் – அத்தனைக்கும் சேர்த்து , ஒரே ஒரு அக்குபங்சர் புள்ளியை மட்டும் தேர்ந்தெடுத்து அதை மென்மையாக தூண்டி , நோய் தீர்க்கும் முறையே ஒற்றைப் புள்ளி சிகிச்சை ஆகும் . இந்த ஒரே ஒரு புள்ளியின் தூண்டுதலில் , நோயாளி சொன்ன அத்தனை உபாதைகளும் குறையத் தொடங்குகின்றன . 

பல புள்ளிகளை தேர்ந்தெடுத்து சிகிச்சை அளிக்கும் போது – பல கல்லில் ஒரு மாங்காய் என்ற கதையாக – நோய் குணமாகும் வாய்ப்புள்ளது . அல்லது குணமடையாமலும் போகலாம் . இது துல்லியமான முறை அல்ல. 

கார் ஓட்டும்போது , கார் ஓட்டுவதில் நல்ல திறமைசாலி ஒருவர் ஹார்னை அடிக்கடி அமுக்கிக் கொண்டே இருக்க மாட்டார் . மிகவும் தேவையான இடங்களில் மட்டும் , ஹாரன் அடிப்பார் . அது போலவே , தேர்ந்த அக்குபங்சர் சிகிச்சையாளர் ஒருவர் பல புள்ளிகளை குழப்பிக் கொள்ளாமல் , ஒரே ஒரு புள்ளியில் மட்டும் தொட்டு சிகிச்சை அளிப்பார் . 

ஒரே ஒரு புள்ளியில் எப்படி நோய்கள் குணமாகும் என்ற சந்தேகம் எழலாம் .  இதற்கான சரியான பதில் உண்டு.  மனித உடல் ஒரே தொகுப்பு. மனித உடலில் ஏற்படும் அத்தனை தொந்திரவுகளுக்கு இடையிலேயும் ஒரு தொடர்பு ( underlying connection )உண்டு. ஒரு நோயாளி கூறும் அத்தனைத் தொந்திரவுகளுக்கும் இடையே உள்ள தொடர்பை ( interconnection between the symptoms ) சரியாக கணித்து – அவை அனைத்திற்கும் மூல காரணமாக (root cause) உள்ள தொந்திரவை குணமாக்கும் அக்குபங்சர் புள்ளியில் சிகிச்சை அளிக்கும் போது  , நோயின் தாக்கம் எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும் அது குறையத் தொடங்கும் . நோய்கள் படிப்படியாக குணமாகும் . 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top