kplingeswaran.in

போலி பெண்ணியத்தில் (fake feminsim) சிக்கி விடாதீர்கள் , பெண்களே !

இந்த சமூக வலைத்தளங்களால் , சமீப காலங்களில் பெண்களிடையே ஒரு குழப்பமான மனநிலை அதிகரித்து வருகிறது. அது என்னவென்றால் , பெண்ணியம் , பெண் விடுதலை பற்றியது ( fake feminsim ) . பெண்ணியம் (feminism)என்றால் என்ன என்பதை , பெண்கள் தவறாக புரிந்து கொண்டு விட்டார்கள் . ஆண்களும் அதை பற்றிய சரியான புரிதல் இல்லாததால் என்ன செய்வதென தெரியாமல் திகைத்து நிற்கிறார்கள் . 

ஒரு ஆணின் உடல் அமைப்பும் ( body structure )  , ஒரு பெண்ணின் உடல் அமைப்பும் முற்றிலும் வேறு வேறானது என்பதை நாம் அறிவோம் . நாம் பெரும்பாலும் மனதின் மூலமாகவே வாழ்க்கையை அணுகுகிறோம் . மனம் எங்கே இருக்கிறது ? அது நிச்சயம் உடலில் தான் குடி கொண்டுள்ளது . தெளிவாக சொல்ல வேண்டுமானால் , மனம் என்பது உடல் முழுவதும் வியாபித்துள்ளது . 

மனம் என்ற பொருளை நாம் விவரித்து பேசும்போது – குண நலன்கள் (character) , பண்புகள் (  attitudes)  , ஆளுமைத் திறன் ( personality )  , ஆழ்மனம் ( sub conscious mind )  , உணர்ச்சிகள் ( emotions )  என்ற பல்வேறு கோணங்களில் மனதை ஆராய்கிறோம் . எனவே , 

ஆணின் உடல் அமைப்பும், பெண்ணின் உடல் அமைப்பும் முற்றிலும் மாறுபட்டவை எனில் – ஆணின் மன அமைப்பும் , பெண்ணின் மன அமைப்பும் முற்றிலும் மாறுபட்டதாகவே தானே இருக்க வேண்டும் ? 

சர்வ நிச்சயமாக , ஒரு பெண்ணின் மனதிலுள்ள 

1. தேவைகள் ( needs and wants )

2 . உணர்வுகள் ( emotions )

3. விருப்பங்கள் ( desires )

4. ஏக்கங்கள் ( longings )

5. சிந்திக்கும் முறை ( thinking pattern )

இவை அனைத்தும் ஆணின் மன அமைப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்டவையே ஆகும் . இதை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் பெண்கள் திணறுகிறார்கள் , கூச்சப்படுகிறார்கள் . ஆண்களுக்கு சுத்தமாக புரியவில்லை . 

விலங்குகளிருந்து பரிணாம வளர்ச்சியில் (Evolution)  – மனிதக்கூட்டம் எவ்வாறு , தலைமுறைக்கு தலைமுறை மாறி வந்தது என்பதையும் , அதில் ஆணின் பங்கு / பெண்ணின் பங்கு என்ன என்பதையும் ஆராய்ந்து பார்த்தால் இவ்வுண்மைகள் தெளிவாக விளங்கும் . 

வேறு வார்த்தைகளில் , விளக்கிச் சொல்ல வேண்டுமானால் – ஒரு பெண்ணுக்குள் பெண் தன்மை (feminine nature)  வெளிப்படாமல் புதைந்து கிடக்கிறது . ஒரு ஆணுக்குள் ஆண் தன்மை (masculine nature) வெளிப்படாமல் புதைந்து கிடக்கிறது . 

ஒரு பெண் தன்னை , ஒரு ஆணோடு உடல் அளவில் , குணங்களின் அளவில் , செயல் திறன் அளவில் ஒப்பிட்டுப் பார்ப்பது எந்த வகையிலும் சரியல்ல . இது பெண் அடிமைத்தனம் அல்ல. அறிவியல் உண்மை.(Evolutionary perspective )

பெண் விடுதலை என்பது – ஆண்களை போல உடை அணிவது , தலை முடியை விரித்துப் போட்டுக் கொள்வது , ஆணோடு பேச்சுக்களில் மல்லுக்கு நிற்பது , வீடியோக்களில் நடனம் ஆடிக் கொண்டே இருப்பது போன்றவை அல்ல. 

பெண்மைக்கென , பரிணாம வளர்ச்சியில் இயல்பான குணங்கள் பல உள்ளன . அதே போலவே , ஆணுக்கும் உள்ளன . இயற்கையை மனிதர்களால் ஓரளவுக்கு மேல் எதிர்க்க முடியாது . அப்படி , எதிர்த்து செயல்பட்டால் வாழ்க்கையில் விரக்தியும் , பிரச்சனைகளும் ( frustration and conflicts ) ஏற்படும் . 

பெண்மையின் இயல்பான , உள்ளார்ந்த ( deep nature ) குணங்களாக – பெண்கள் , ஆண்களை பார்த்து வெட்கப்படுவதை உதாரணமாக சொல்லலாம். வெட்கப்படும் போது அழகாக தோற்றமளிக்காத பெண்களே உலகில் இல்லை . ஒரு ஆண் ஒரு பெண்ணை நேரடியாக பார்த்துக் கொண்டே இருப்பான் . ஆனால் , பெண் அப்படி பார்க்க மாட்டாள் . கடைக்கண்ணில் , ஓரக்கண்ணில் தான் பார்ப்பாள் . ஆண் அவளை பார்க்காத போதுதான் பார்ப்பாள் . 

பாலுறவின் போது , துல்லியமாக பெண்மை ( feminine energy )  வெளிப்படும் . உதாரணமாக , பெண்ணுக்கு தேவைப்படும் முன் விளையாட்டுகளை ( foreplay )  உதாரணமாக கூறலாம் . அதே போல , உடலுறவில் ஆண்களுக்கு விந்து வெளியேறுவதை போல பெண்களுக்கு உடனடியாக வெளியேறாது . நீண்ட நேரம் கழித்தே வெளியேறும் (squirting)  . நீண்ட நேரம் பெண்களால் தாக்குப் பிடிக்க முடியும். 

இப்போது , பெண்களும் ஆண்களும் என்ன செய்ய வேண்டும் ? பெண்கள் , தங்கள் பெண் தன்மையை புரிந்து கொண்டு , பெண்மையை கொஞ்சம் கொஞ்சமாக வெளிக்கொணர முயற்சிக்க வேண்டும் . அதே போலவே , ஆண்களும் தங்களின் ஆண் தன்மையை வெளிக்கொணர முயற்சிக்க வேண்டும் . ஒரு ஆண் ஆணாகத்தான் வாழ வேண்டும் . ஒரு பெண் பெண்ணாகத்தான் வாழ வேண்டும் . இல்லையெனில் , குடும்பங்களில் , சமூகத்தில் பிரச்சனைகள் , அடிதடிகள் , கள்ளகாதல்கள் நடக்கத்தான் செய்யும். 

ஒரு ஆண் , தன் மனதிலிருந்து ஆண் தன்மைகளை வெளிப்படுத்தி வாழத் தொடங்கினால் தான் , மனதில் ஒரு அமைதி , நிறைவு ( satisfaction and success ) வரும் . பெண்களும் , இயற்கை நியதிப்படி , பெண்மையை வெளிப்படுத்தி வாழத் தொடங்கினால் தான் வாழ்க்கை ஒழுங்காக இருக்கும் .  

பரிணாம வளர்ச்சி ( Evolution ) என்பது ஏதோ கட்டுக்கதை அல்ல. அது அறிவியல். போலி பெண்ணிய ( fake feminism ) கருத்துக்களில் சிக்கி வாழ்க்கையை வீணடிக்க வேண்டாம் . 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top