kplingeswaran.in

விந்து ஏன் முந்துகிறது ? ( Premature Ejaculation )

ஆண்களுக்கு பலவிதமான பாலியல் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பொதுவாக , பின்வரும் ஏதேனும் ஒரு பிரச்சனையை , ஆண்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கிறார்கள். அவை :-

  1. உடலுறவில் விந்து முந்துதல் ( premature ejaculation )
  2. ஆண் உறுப்பில் போதிய விறைப்புத் தன்மை இல்லாமை ( erectile dysfunction )
  3. உடலுறவில் ஆர்வம் குறைதல் ( loss of libido )

ஒவ்வொரு தலைப்பிலும் விரிவாக பேச வேண்டியிருப்பதால் , விந்து முந்துதல் என்ற தலைப்பில் மட்டும் இக்கட்டுரையில் ஆராய்கிறேன்.

ஆண் பெண் உடலுறவின் போது , பெண்ணுறுப்பில் தன்னுடைய உறுப்பை செலுத்தும் (penetration ) தருணம் வரும்போது தான் , இந்தப் பிரச்சனையை ஒரு ஆண் சந்திக்க நேரிடுகிறது. சில ஆண்களுக்கு , பெண்ணை முழு நிர்வாணமாக பார்த்த உடனேயே , அதிக கிளர்ச்சியில் ( over excitation ) அதைத் தாங்க முடியாமல் , விந்து ஒழுகி விடும்.

ஒரு ஆண் , பெண் உறுப்பை நேருக்கு நேர் பார்க்கும்போது , ஆழ்மனதில் ஒரு பயம் ( panic and anxiety ) உருவாகி விடுகிறது. இதை ” Performance Anxiety ” என மருத்துவர்கள் கூறி விடுவார்கள். ஆனால் , உண்மையில் ஆணின் மனதில் நடக்கும் உணர்ச்சிகரமான எண்ண ஓட்டங்கள் , அதை விட தீவிரமானவை.

பெண்ணுறுப்பை , அப்பட்டமாக பார்க்கையில் – பெரும்பாலான ஆண்களுக்கு அதை என்ன செய்ய வேண்டும் என்பதே தெரிவதில்லை. அதை எப்படி கையாள வேண்டும், எப்படித் தொட வேண்டும் என்பதைப் பற்றி ஒரு முன்யோசனையும் ( no idea ) இல்லை. இருந்தாலும், ஆணின் மனது பெண்ணை வெற்றி கொள்ள நினைக்கிறது. எப்படி வெற்றி கொள்வது ? பெண்ணுறுப்பில் , தன் உறுப்பை நுழைத்து , சரியாக விந்தை உள்ளே செலுத்தி விட்டால் , ஆண் தான் பெண்ணை வெற்றி கொண்டதாக நினைக்கிறான். இது ஆணுக்கு கண்முன்னே இருக்கும் ஒரு சவால்.

உண்மையிலே, உடலுறவின் நோக்கம் என்னெவென்றால் – ஆணும் பெண்ணும் இணைந்து காண வேண்டும் என்பதே. ஒருவரிடம் இருந்து இன்பத்தைப் பெறுவது அல்ல. உடலுறவில் முழு இன்பம் எப்போது கிடைக்கும் என்றால் , தன்னுடைய ” தன்முனைப்பு , அகங்காரம் , திமிர் , புத்தி ” போன்றவற்றை எல்லாம் கழற்றி வைத்து விட்டு – ஆண் பெண்ணிடமும் , பெண் ஆணிடமும் சரணடையும் போதுதான். ( surrendering the EGO ).

ஒரு பெண்ணின் உறுப்போடு , தன்னுடைய உறுப்பை இணைத்து அசைத்து இன்பம் காணும் ( frictional pleasure ) செயலை விட – அதை வெற்றி கொள்ள வேண்டும் என்ற அச்சம் ஆணின் ஆழ்மனதில் பதட்டமாக உருவெடுக்கிறது. இதனால் , ஆணின் உடல் முழுக்க இறுக்கம் ( muscular tension ) ஏற்படுகிறது. குறிப்பாக , இடுப்புப் பகுதி / பிட்டம் / ஆணுறுப்பு போன்றவற்றில் கடுமையான இறுக்கம் ஏற்பட்டு , விந்து வெளியேறத் தயாராகி விடுகிறது. சீக்கிரம் வென்றாக வேண்டுமே , என்ற அவசரத்தில் ஆண் உள்ளே நுழைக்கிறான்.

ஆண் உறுப்புகளின் தசைகளும் , பெண் உறுப்பின் உட்புற தசைகளும் ஒன்றோடு ஒன்று சந்திக்கும் போது , ஆணுறுப்பு அளவுகடந்த இன்பத்தை ( high pleasure ) நுகர்கிறது. ஏற்கெனவே , இறுக்கமாக உள்ள பிட்டம் / இடுப்பு பகுதியால் – இந்தக் கிளர்ச்சியை ( not tolerating the vibrations in pelvic floor muscles ) தாங்க முடியாமல் – வேறு வழியே இல்லாமல் , ஆண் தன் இடுப்பை வேகமாக அசைத்து , விந்தை வெளியேற்றி உடல் இறுக்கத்தை குறைத்துக் கொள்கிறான். இது அனைத்தும் ஒருசில நிமிடங்களில் நடந்து முடிந்து விடுகிறது. ஆனால் , பெண் பலத்த ஏமாற்றத்திற்கு ஆளாகிறாள். ஆணுக்கோ ஓரளவு நிம்மதி. இருந்தாலும் , அதிக நேரம் பெண் உறுப்புக்குள் தாக்கு பிடிக்க முடியவில்லையே என்று குற்ற உணர்ச்சியும், அவமானமும் ( shame and guilty feeling ) ஆணுக்கு ஏற்படுகிறது.

ஆண்கள் சந்திக்கும் , மற்ற சில பாலியல் பிரச்சனைகளை அடுத்த கட்டுரைகளில் பார்ப்போம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top