kplingeswaran.in

வேதாத்திரி மகரிஷி அவர்களின் “அறிவு” தத்துவம் ! [ Consciousness ]

வேதாத்திரி மகரிஷி அவர்களின் தத்துவங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது , அவர் விளக்கியுள்ள ” அறிவு ” என்ற தத்துவம் ஆகும். இந்த விளக்கத்தை , தத்துவம் என்று கூறுவதை விட , விஞ்ஞானம் (Science) என்று தான் கூற வேண்டும். 

பொதுவாக , அறிவு என்றால் நாம் என்ன நினைப்போம் ? புத்திசாலித் தனம், பல விஷயங்களை தெரிந்து வைத்திருத்தல் , திறமை , சிந்தனை , திட்டமிடுதல் போன்றவையே அறிவு என நாம் நினைக்கிறோம். ஆனால் , மகரிஷி ” அறிவு ” என்பதன் அர்த்தத்தையே புரட்டிப் போடுகிறார். 

மகரிஷி அவர்கள் நிறுவிய , அறிவுத்திருக்கோயில்களுக்கு ஆங்கிலத்தில் ஒரு பெயர் சூட்டியுள்ளார். அறிவு திரு கோயில் என்றால் , ஆங்கிலத்தில் Temple of Wisdom என்றோ அல்லது Temple of Knowledge என்றோ தானே இருக்க வேண்டும் ? ஆனால் அவர் “ Temple of Consciousness “ என்று மொழி பெயர்த்துள்ளார். இந்தப் பெயர் முதலில் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. Consciousness என்பதன் பொருள் “ உணர்வு , நினைவு “ போன்றவைதானே ? 

பிறகு , அவரது நூல்களைப் படித்து விளக்கம் பெறப் பெற , கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது. இருந்த போதிலும் , அறிவு என்பதற்கு மகரிஷி கொடுக்கும் விளக்கம் சாதாரணமாக புரிந்து கொள்வது சிரமம் தான். அதற்கு முக்கிய காரணம் , நம் மனம்தான் நம் அறிவை புரிந்து கொள்ள முயற்சிக்கிறது. எனவே , அது நம் சிந்தனையிலிருந்து நழுவி ( elusive ) விடுகிறது. 

சுத்தவெளியையே [ Space ] மகரிஷி அறிவு என்கிறார். Consciousness என்றால் , பொதுவாக உணர்வு நிலை அல்லது நினைவு நிலை. சற்று உன்னிப்பாக கவனிப்போம் . நாம் ஒரு பொருளைத் தொடுகிறோம். கைகள் வாயிலாக ஒரு பொருள் இருப்பதை மனம் ” அறிகிறது ” . ஒருவர் , நமக்கு சில தகவல்களை சொல்கிறார். அதன் அர்த்தத்தை , நாம் ” அறிய ” முற்படுகிறோம். எனவே , Consciousness என்பதை உணர்தல் என்று சொல்லுவதை விட , அறிதல் என்று கூறுவதே பொருத்தமான வார்த்தையாகும் . 

ஒருவர் மற்றொவரைப் பார்த்து , உனக்கு அறிவு இருக்கிறதா ? எனக் கேட்டால் அவருக்கு கோபம் வந்து விடும் அல்லவா ? இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் சூழலில் , அறிவு என்றால் என்ன என்பதை விவாதிக்கிறோம்.  

மனிதர்களே தோன்றாத ஒரு காலத்தில் , அதற்கும் முன் தாவரங்கள் மட்டும் இருந்த காலத்தில் , அதற்கும் முன் கோள்கள் மட்டும் சுழன்று கொண்டிருந்த காலத்தில் , அதற்கும் முன்னர் சுத்தவெளி (space)  மட்டும் இருந்த காலங்களிலும் கூட – அறிவு என்ற ஒரு தத்துவம் ( Concept )  , ஒரு பொருள் இருந்திருக்கத் தான் வேண்டும் இல்லையா ? 

அந்த சுத்தவெளியே பரிணாம வளர்ச்சியில் ( Evolution )  – ஒரே சீராக , ஒரு ஒழுங்காக , படிப்படியாக ஒவ்வொரு தோற்றமாக , உருவமாக – அந்தந்த உருவங்களில் அவற்றின் வடிவமாக , குணமாக , உணர்ச்சியாக – துல்லியமான ஒழுங்கில் மாற்றம் பெற்று வருகிறது . 

அறிவு என்றால் , இயக்க ஒழுங்கு [ Order of function ]  என்றே மகரிஷி வரையறுக்கிறார். சுத்தவெளிதான் , தன்மாற்றம் ( self transformation ) பெற்று ஒவ்வொரு பொருளாக , உயிரினமாக நிலைமாற்றம் பெறுகிறது. அதுவே இறைவன் , இறைநிலை. 

பரிணாம வளர்ச்சியில் திடீரென எதுவும் உருவாகவில்லை. பரிணாம வளர்ச்சியின் கடைசித் தோற்றமான , மனித உருவத்தில் , அந்த அறிவு என்ற தத்துவமே மனமாக மாறி – அறிவே அறிவை ( self – trying to realize its own potential ) உணர்ந்து கொள்ள முற்படுகிறது . அதாவது , தன்னைத் தானே உணரும் ஆர்வமாக மலர்ச்சி பெறுகிறது.

2 thoughts on “வேதாத்திரி மகரிஷி அவர்களின் “அறிவு” தத்துவம் ! [ Consciousness ]”

  1. மெஞ்ஞுனமும் உணர்ந்து விஞ்ஞானத்துடன் இணைத்து
    அதையும் தன் அனுபவத்தால் உலக மக்கள் நலன் கருதி சொன்ன வார்த்தை
    குருவே போற்றி 🙏
    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்

  2. 1991 master certificate.
    பணி நிமித்தம் மாற்றம்
    தொடர முடியாத சூழ்நிலை
    எத்தனை தான் கற்றாலும் இன்புறா சித்தம்
    நினைவுகள் ஆழ்மன பதிவுகள்
    என்றும் அழியாது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top