
தற்போது , பலவிதமான கல்லீரல் வியாதிகளால், பலரும் துன்பப்படுகிறார்கள்.
இந்த தருணத்தில் , அக்குபங்சர் சிகிச்சை முறை தத்துவங்களின்படி , கல்லீரலை எவ்வாறு அணுகிறோம் என்ற சில முக்கிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அக்குப்பங்சரின் படி, கல்லீரல் என்பது பஞ்சபூதங்களில் ஒன்றான ” மரம் ” மூலகத்திற்குரிய உறுப்பாகும். நவீன மருத்துவம் , கல்லீரல் 500-க்கும் மேற்பட்ட பணிகளை செய்கிறது என்கிறது.
கல்லீரல் என்பது உடலில் உள்ள நச்சுத் தன்மையை நீக்கும் ( முறிக்கும் – detoxification ) ஒரு முக்கிய உறுப்பாகும். இது உடலின் தசைகளுக்கும் , தசைநார்களுக்கும் சக்தி அளிக்கிறது. கல்லீரல் எவ்வளவு ஆரோக்கியமாக இயங்குகிறதோ , அவ்வளவுக்கு அவ்வளவு – கண்கள் குளிர்ச்சியாக , பிரகாசமாக இருக்கும் ( தெரியும் ).
நம்முடைய உடலுக்குள் ,
* காற்று வழியாக
* நீர் மூலமாக
* உணவு மூலமாக
* எண்ணங்கள் மூலமாக
* ரசாயனங்கள் மூலமாக
* ரசாயன மருந்துகள் மூலமாக – நுழையும் நச்சுத் தன்மையை முறித்து
— உடலையும் / சிறுநீரகங்களையும் காக்கும் மகத்தான பணியை கல்லீரல் செய்கிறது.

நடு இரவு 11 – 1 , 1 – 3 ஆகிய இந்த இரண்டு + இரண்டு = நான்கு மணி நேரங்கள் தான் – கல்லீரலும் , அதன் துணை உறுப்பாகிய பித்தப்பையும், உச்ச கட்டத்தில் வேலை செய்யும் நேரமாகும்.
இந்த நேரத்தில் நாம் தூக்கத்தில் இருக்க வேண்டும் அல்லது முழு ஓய்வில் இருக்க வேண்டும் . கல்லீரல் / பித்தப்பை பாதிக்கப்பட்டால் – உடலிலும் , மனதிலும் ஒரு எரிச்சல் உணர்வு இருந்து கொண்டே இருக்கும். மனதில் சாந்தம் என்பதே இருக்காது. மிக எளிதில் கோபப்பட்டு விடுவோம்.
மேற்கண்ட உண்மைகளை , ஊன்றிப் படித்து அசைபோட்டு பாருங்கள். என்னென்ன வழிகளில் எல்லாம் நாம் கல்லீரலை கெடுத்துக் கொள்கிறோம் என்பது புரியும் .
கல்லீரல் / பித்தப்பை ஆகிய உறுப்புகளுக்கு , முறையான அதற்குரிய அக்குபங்சர் புள்ளிகள் மூலம் உயிரோட்டம் அளிப்பதன் மூலம் – கல்லீரல் நோய்களுக்கு நிவாரணம் அளிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் ( possibilities to treat ) உண்டு.
எனினும், ஒவ்வொரு உறுப்பும் இன்னொரு உறுப்புடன் தொடர்பு கொண்டு இயங்குகிறது என்ற உண்மையையும், மற்றும் அடிப்படை காரணம் ( root cause ) தெரியாமல் நோயை குணமாக்குவது மிக கடினம் என்ற பால பாடத்தையும் நாம் மறக்கவே கூடாது.