kplingeswaran.in

ஒருவரிடம் உயிரோட்டம் ( Life energy or Spirit ) உள்ளதா என எப்படி அறிவது ?

1. கண்களில் ஒளி ( brightness in eyes )

2. முகத்தில் பிரகாசம் ( brightness in facial expressions )

3. இயல்பாகவே ஆழமான மூச்சு இழுத்து விடுதல் ( deep breathing )

4. அவசரமின்றி , நிதானமாக , தடைகள் அற்ற , இறுக்கமற்ற உடல் அசைவுகள் ( free and gracious body movements )

இதில் நான்காவது மிக முக்கியமானது ஆகும் . உடல் அசைவுகள் என்பது கீழே உட்கார்ந்து எழுதல் , குனிதல் நிமிர்தல் , எளிதாக ஓடுதல் நடத்தல் போன்ற செயல்களை குறிக்கும் .

உடலில் உயிரோட்டம் இல்லை என்பது மனதில் வெளிப்படாத உணர்வுகள் உள்ளன ( controlled emotions ) என்பதையும் , மனதில் இறுக்கம் ( unconscious tensions ) உள்ளது என்பதையும் காட்டுகிறது .

குழந்தைகளிடம் மேலே சொன்ன நான்கு விஷயங்களையும் , உங்களால் கவனிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்க உண்மை ஆகும் .

ஆழமாக , இயல்பாக மூச்சு இழுத்து விட வில்லையெனில் – உடல் உறுப்புகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு , முகம் ஒளியிழந்து போகும். கை கால்கள் சோர்வடையும். உடல் நோய்வாய்ப்பட்டது போல தோன்றும்.

பெரும்பாலும் , மக்கள் இதை ஏதோ நோய் தாக்கி விட்டது என நினைத்து மருத்துவர்களிடம் செல்வார்கள். ஆனால் தீர்வு அதுவன்று.

உடல் உறுப்புகளுக்கு பல கோணங்களில் அசைவுகள் கொடுத்து – இயங்கச் செய்து , உடல் செல்களில் உறைந்து கிடைக்கும் , மன அழுத்தங்கள் / அடக்கி வைக்கப்பட்ட உணர்ச்சிகள் இவற்றை வெளியேறச் செய்தால் மட்டுமே நிவாரணம் கிடைக்கும்.

இவ்வுண்மைகளை அடிப்படையாக கொண்டு செயல்படும் ஒருவிதமான பயிற்சி முறையே BIO ENERGETICS எனப்படும். இதை உருவாக்கியவரின் பெயர் : Dr ALEXANDER LOWEN ( MEDCIAL DOCTOR AND THERAPIST ) .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top