kplingeswaran.in

வயிற்றுப் பிரச்சனைகள் ஏன் ஏற்படுகின்றன ?

💢 கடந்த 25 ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கை முறை, படிப்படியாக பரபரப்பான வாழ்க்கையாக ( Modern Life ) மாறி விட்டது. தற்போதைய கால சூழலில் ( 2026 ) மன அழுத்தம், இறுக்கம், தூக்கமின்மை, எதிர்காலம் குறித்த அச்சம் ( apprehension about future ) போன்ற மனரீதியான பிரச்சனைகள் வாட்டி வதைக்கின்றன.

அக்குபங்சர் தத்துவங்களின் படி – கவலை, மன அழுத்தம் போன்றவை வயிற்றின் இயக்கத்தை பாதிக்கக் கூடியவையாக இருக்கின்றன.

இதன் Vice versa- வும் உண்மை தான். அதாவது, வயிற்றின் ( இரைப்பையின் ) ஆரோக்கியம் சீர்குலையும் போது , அதாவது முறையற்ற உணவுப் பழக்க வழக்கங்கள், கண்ட நேரங்களில் உண்பது, பசிக்காமல் சாப்பிடுவது, பசிக்கும்போது சாப்பிடாமல் இருப்பது போன்றவற்றால் இரைப்பை பாதிக்கப்படும் போது – வாழ்க்கையில் நடக்கும் சிறு விஷயங்கள் கூட, அதிக கவலை, மனதில் அழுத்தம், அச்சம் ( problems are magnified by mind ) போன்றவற்றை நிச்சயம் உண்டாக்கும்.

எனவே, முதலில் வயிற்றின் இயக்கத்தை சரி செய்ய வேண்டும் , ஜீரண சக்தியை மேம்படுத்த வேண்டும்.

அதற்கு என்ன செய்வது ?

முதல் படியாக- வயிற்றுக்கு உணவை தவிர்த்து சற்று ஒய்வு கொடுக்க ( fasting ) வேண்டும் . பாதிப்பு அதிகமாக இருந்தால், அக்குபங்சர் சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top