
என்னுடைய ” அதிசய அக்குபங்சர் ” நூல் வெளிவந்து ஓராண்டு நிறைவு பெற்று விட்டது. ( Pustaka Digital Media , Bangalore )
அக்குபங்சரில் ஆர்வமுள்ளவர்கள் இந்த நூலை வாங்கிப் படிக்கிறார்கள். ஒவ்வொரு ஊரிலும் புத்தக கண்காட்சிகளில் நல்ல விற்பனை ஆகிறது.
அக்குபங்சர் மருத்துவம் என்பது, ” ஒரு போலி மருத்துவம் ( pseudoscience ) , நம்பிக்கையின் அடிப்படையிலான மருத்துவம் ( placebo effect ) , அறிவியல் ஆதாரங்கள் இல்லாத சிகிச்சை முறை ( unscientific and not evidence based ) ” என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன.
தற்போது , தமிழக அரசு நூலகங்களிலும் என்னுடைய அக்குபங்சர் நூல், வாசகர்களின் வாசிப்பிற்கு வைக்கப்பட்டுள்ளது .

நிச்சயம் இது உண்மை அல்ல. என்னுடைய நூலில், அக்குபங்சர் என்பது – ” எவ்வாறு செயல்படுகிறது, எவ்வாறு நோய்களை குணமாக்குகிறது, என்னென்ன நோய்களை குணமாக்கும் சாத்தியக் கூறுகள் உள்ளன ” என்பவற்றை முடிந்தவரை அறிவியல் பூர்வமாகவும், தர்க்கரீதியாகவும் ( logical ) விளக்க முற்பட்டுள்ளேன் .
மன நோய்களை ( மிதமான மன நோய்கள் / neurotic disorders ) கூட, குணமாக்கும் சாத்தியக் கூறுகள் உள்ளன என்பதை சிலபல உதாரணங்களுடன் விளக்கியுள்ளேன் .
அக்குபங்சர் என்பது நவீன மருத்துவத்துடன் தொடர்புடையது அல்ல. அக்குபங்சருக்கென தனித்துவம் வாய்ந்த நோயறியும் முறைகள் ( diagnosis methods ) , சிகிச்சை முறைகள் ( treatment / therapeutic ) , அக்குபங்சர் கோட்பாடுகள் ( Governing principles ) , அடிப்படை கருத்து உருக்கள் ( theories ) என தனியாக உள்ளன.
அக்குபங்சர் கற்றுக் கொள்ள வேண்டுமென ஆர்வம் உள்ளவர்கள் , அக்குபங்சரில் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள், அவற்றில் சந்தேகங்கள் உள்ளவர்கள் நிச்சயம் வாங்கிப் படிக்கலாம் .
பக்கங்கள் : 175
விலை : 200 + courier charge
புத்தகம் வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் :
95976 65196 ( WhatsApp / Call )