kplingeswaran.in

விஞ்ஞானிகளின் தத்துவஞானி – வேதாத்திரி மகரிஷி ( Vethathiri Maharishi )

வேதாத்திரி மகரிஷி அவர்கள் ” பாமர மக்களின் தத்துவஞானி ” ( Common man’ s philosopher ) என அழைக்கப்படுகிறார். இது ஒரு வகையில் உண்மைதான் என்றாலும், அவர் ” விஞ்ஞானிகளின் தத்துவஞானி ” ( Philosopher of Scientists ) என்று அழைக்கப்படுவதே மிகப் பொருத்தமாகும். அதற்கான காரணங்களை விளக்குகிறேன்.

மகரிஷி அவர்கள் எளிய முறை உடற்பயிற்சி , காயகற்ப பயிற்சி போன்றவற்றை உருவாக்கி இருக்கிறார். குண்டலினி யோகம் என சித்தர்களால் பயில்பட்டு வந்த தியான முறையை எளிமையாக்கி கற்றுத் தந்துள்ளார். மன வளத்திற்கென சில உளவியல் ரீதியான , சுய பரிசோதனை பயிற்சிகளை கற்றுத் தந்துள்ளார்.

ஆனால் , அவரின் உச்சகட்ட சாதனையாக நான் நினைப்பது : வெட்டவெளி ( Space ) என பொதுவாக அறியப்படும் சுத்தவெளியை அவர் தெய்வம் ( God ) என்று உறுதிப்படக் கூறுவதுதான். அவ்வாறு அவர் கூறுவதோடல்லாமல் , பல்வேறு கோணங்களில் – பகுத்தறிவுக்கு முரண்படாத வகையிலும் , இதுவரை விஞ்ஞானிகளால் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்களுக்கு ( theories ) முரண்படாத வகையிலும் அந்தக் கருத்துக்கள் அமைந்துள்ளன.

ஒன்றுமே இல்லாத ( vacuum ) , வெளியை எப்படி தெய்வம் என்பது ? நான் புரிந்து கொண்டவரை விளக்குகிறேன். முதலில் அது ஒன்றுமே இல்லாதது அல்ல. வெட்டவெளி என்பது , ஐம்புலன்களின் அதாவது :

  1. நம் பார்வைக்கும்
  2. காதின் கேட்கும் திறனுக்கும்
  3. மூக்கால் உணரக்கூடிய திறனுக்கும்
  4. சுவை உணர்வுக்கும்
  5. தோலால் உணரக்கூடிய அளவுக்கும்
  6. அதற்கும் மேல் , மனத்தால் யூகிக்க கூடிய அளவிற்கும்

கீழே அமைந்துள்ளது ( below the perception level of five sense and human mind ) . சுத்தவெளி என்பது கற்பனைக்கு எட்டாத அளவில் விரிந்தும், பரந்தும் , நுண்ணிய லேசான அளவிலும் ( very light dark matter )  இயங்கக் கூடிய ஒரு பொருள் ஆகும். அந்த சுத்தவெளி இயல்பாகவே ஒரு குணத்தை ( attribute ) பெற்றுள்ளது. அதவாது , சுத்தவெளி என்பது ” தன்னைத் தானே இறுக்கிக் கொள்ளும் ”  ( self compressive force ) ஒரு ஆற்றல் ஆகும். அப்படி தன்னைத் தானே இறுக்கிக் கொள்வதால் , வெளியில் ஆங்காங்கே – எந்தெந்த இடங்களில் அவ்வழுத்தம் ஒரு குறிப்பிட்ட எல்லையை தாண்டுகிறதோ , அங்கே சுத்தவெளியே ஒரு மிகச் சிறிய உருண்டையாக ( energy particle ) சுழலத் தொடங்குகிறது. ஏன் அது உருண்டை ( கோள வடிவில் / spherical shape ) சுற்றுகிறது என்றால் – சுத்தவெளி எல்லாத் திசைகளிலும் இருந்து தன்னைத் தானே இறுக்கி கொள்வதால்.

அது கோள வடிவில் சுழன்று கொண்டிருந்தாலும் – அதன் மையப்பகுதி சுழலாத வெளியாகவே ( static )  இருக்கிறது. காலம் செல்லச் செல்ல , அந்த சுழலாத மையப்பகுதி விரிவடைந்து கொண்டே வருகிறது. கோள வடிவில் துகள் போல சுழன்று கொண்டிருப்பது , சுத்தவெளியே தான் என்ற உண்மையை நாம் மறக்க கூடாது. மையத்திலிருந்து சுழலாத பகுதி , வருடங்கள் போகப்போக , விரிவடைகிறது. கோள வடிவான துகளின் — பகுதிகள் / கூறுகள் – சுத்தவெளியின் உள்நோக்கிய அழுத்தத்தை தாங்க முடியாமல் சிதறி பரவி , அழுத்த அலைகளாக ( magnetic waves or repulsive waves ) சுழன்று சுழன்று வெளியேறுகின்றன. ஒரு கட்டத்தில் துகள்கள் ( Energy particles ) மீண்டும் , எதுவுமற்ற சுத்தவெளியாகவே மாறி விடுகின்றன.

ஒவ்வொரு துகளின் மையப்பகுதியில் நிலைத்திருக்கும் சுத்தவெளியே தன்னுடைய பேரரறிவால் ( Consciousness ) துகள்களின் சுழற்சி வேகத்தையும், அதன் மையப்பகுதி விரிவடையும் வேகத்தையும் , ஒரு துகள் மற்ற துகள்களோடு இணைந்து மூலக்கூறுகள் / தனிமங்கள் ( Elements ) உருவாவதையும் கட்டுப்படுத்துகிறது.

இந்த அடிப்படை உண்மைகளை தவற விட்டு விட்டால் , பல்வேறு அறிவியல் பிரிவுகளான ” இயற்பியல் , வேதியியல் , உயிரியல், உளவியல் , வானவியல் , மருத்துவம் ” மேலும் இதுபோன்ற பல துறைகளின் விடுபடாத புதிர்களுக்கும் , ரகசியங்களும் பதில் நிச்சயம் கிடைக்காது என்கிறார் வேதாத்திரி மகரிஷி.

ஏன் அவ்வாறு மகரிஷி கூறுகிறார் என்றால் , சுத்தவெளி என்ற நுண்ணிய பொருளே – புலன்களுக்கு எட்டாத நிலையில் துகள்களாகவும் , அவை இணைந்து மூலக்கூறுகள் / தனிமங்கள் / கோள்களாகவும் , பூமியில் கோடிக்கணக்கான உயிரினங்களாகவும் , பரிணாம படிநிலைகளில் ( Evolutionatiory process ) கடைசியில் மனித மனமாகவும் இயங்குகிறது. அதே கடைசி நிலையில் , மனித மனம் தன் மூல நிலையையும் சிந்தித்து உணரும் ஆற்றலையும் பெற்று இயங்குகிறது. நம் மனத்தால் சுத்தவெளியை உணர முடியாவிட்டால் – வேறு எந்த விஞ்ஞான கருவிகளாலும்  உணர்வது முடியாது என்பது அவரின் முடிவு.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top