kplingeswaran.in

கல்லீரலும், கண்களும், மனமும் !

நாம் வெளி உலகோடு தொடர்பு கொள்வதில் , வெளி உலகை பார்ப்பதில் கண்கள் மிக முக்கிய பங்காற்றுகின்றன . கண்களை நாம் கண்களாக மட்டும் பார்க்கிறோம் . 

ஆனால் , கண்களுக்கும் , உடலுக்கு உள்ளே அமைந்துள்ள கல்லீரலுக்கும் மிக முக்கிய தொடர்பு உள்ளது. தொடர்பு என்று சொல்வதை விட , கண்கள் கல்லீரலின் ஆரோக்கியத்தை பிரதிபலிக்கின்றன என்றே சொல்லலாம் . 

கல்லீரல் அதிக எடையுள்ள ஒரு உறுப்பு. அது 500 – க்கும் மேற்பட்ட பணிகளை செய்வதாக சொல்கிறார்கள் . 

அக்குபங்சர் சித்தத்தத்தின்படி , கல்லீரலுக்குரிய வெளிப்புற உறுப்பு கண். இரவு 11 – 1, 1 – 3 இந்த நான்கு மணி நேரத்திலும் கல்லீரல் , அதன் துணை உறுப்பாகிய பித்தப்பை இரண்டிலும் உயிரோட்டம் உச்சக் கட்டத்தில் ஓடுகிறது. இதன் பொருள் என்னவெனில் , 

1. ரத்தத்தில் உள்ள ரசாயனப்பொருட்கள் , நகச்சுப்பொருட்களின் ( toxins and harmful chemicals ) விஷத்தன்மையை கல்லீரல் முறிக்கிறது . 

2. உடலிலுள்ள தசை நார்கள் , தசைகள் ஆகியவற்றின் தளர்ச்சியை கல்லீரல் நிவர்த்தி செய்கிறது . 

3. மனதின் பலகீனத்தை சரிசெய்து , மனதிற்கு நிதானமாக சிந்திக்கும் ஆற்றலை அளிக்கிறது . 

இதற்கு மேலும் கூட பல பணிகளை கல்லீரல் , பித்தப்பை இரண்டு செய்யலாம் . 

அக்குபங்சரில் , மரம்  என்ற சொல்லை பஞ்சபூத குறியீடாக கல்லீரலை குறிப்பதற்கு பயன்படுத்துகிறார்கள் . அதாவது , மரம் என்ற பஞ்சபூதம் கல்லீரலை குறிக்கிறது.  

மரங்கள் / செடி கொடிகள் / இலை தலைகள் போன்றவை பசுமையாக இருக்க வேண்டுமென்றால் , அவற்றில் நீர்த் தன்மையும் , குளிர்ச்சியும் இருக்க வேண்டும் . இல்லையெனில் , மரங்கள் வாடி வதங்கி விடும் . இதை அப்படியே கல்லீரலுக்கு பொருத்திப் பாருங்கள் .  

கல்லீரல் ஆரோக்கியமாக இருந்தால் , அதன் குளிர்ச்சியும் , பசுமையும் உடல் முழுக்க பிரதிபலிக்கும் . உடல் தசைநார்கள் வலுவாக இருக்கும் . 

ஒருவர் துக்கத்தில் கண்ணீர் விட்டு அழும்போது , கல்லீரலில் அடக்கி வைக்கப்பட்டுள்ள சோகம் , துக்கம், ஆற்றாமை , கோபம் போன்றவை கூட வெளியேறி ( emotional release ) விடலாம். கூடவே , கல்லீரல் சேர்த்து வைத்துள்ள நச்சுப் பொருட்களும் கூட வெளியேறலாம். அதனால் தான் , அழுது முடித்தவுடன் நமக்கு மன பாரம் குறைந்த ஒரு லேசான உணர்வு ( feeling of light heartedness ) ஏற்படுகிறது.

சித்த மருத்துவத்தில் , கண்ணுக்கு கலிக்கம் என்று ஒரு மருந்து விடுவார்கள். தோல் நோய்கள் உள்ளவர்கள் அமாவாசை , பௌர்ணமி தினங்களில் இப்படி விட்டுக் கொள்ள வேண்டும். இந்த மருந்து விட்டவுடன் , கண்களில் இருந்து நீராய் கொட்டும். கல்லீரலிலிருந்து வெளியேறாத நச்சுக்களே இப்படி கண்ணீராய் வெளியேறுகின்றன என யூகிக்கிறேன்.

கல்லீரலின் குளுமை கண்களில் பிரதிபலிக்க வேண்டும் . நம்மில் பெரும்பாலோர்க்கு , காலையில் எழுந்திருக்கும் போது – கண்களில் எரிச்சலும் , சூடும் தான் தெரிகிறது . இரவு நேரத்தில் கல்லீரல் தன் பணிகளை ஒழுங்காக செய்யவில்லை , அவை ஓய்வெடுக்கவில்லை என்பதையே கண்களின் எரிச்சலும் , சூடும் சுட்டி காட்டுகின்றன. 

மனம் குளிர்ச்சியாக ( சாந்தமான உணர்வு ) இருக்க வேண்டும் , கண்களில் எரிச்சல் / வலி / வெப்பம் போன்றவை இல்லாமல் இருக்க வேண்டுமெனில் – அதற்கு இரவு 7 மணிக்கு மேல் உடலுக்கு ஓய்வும் , ஆழ்ந்த உறக்கமும் அவசியம் தேவை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top