kplingeswaran.in

காயகற்ப பயிற்சியில், DNA ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும் !

வேதாத்திரி மகரிஷி அவர்கள் , தான் உருவாக்கிய மனவளக்கலை பயிற்சியில் ” காயகற்ப பயிற்சி ” என்ற ஒரு பயிற்சியை எளிமைப்படுத்தித் தந்துள்ளார். அது முற்காலத்தில் சித்தர்கள் செய்து வந்த பயிற்சி எனவும், அதை 40 வருட தொடர் ஆராய்ச்சிக்கு பிறகு , மீண்டும் மீட்டுருவாக்கம் ( rediscovery and reconstruction ) செய்து வழங்கியுள்ளதாகவும் கூறியுள்ளார் .

காயகல்ப பயிற்சியின் நோக்கங்கள் என மூன்று முக்கிய நோக்கங்களை , அவர் குறிப்பிடுகிறார் : –

1. மரணத்தை தள்ளிப் போடுதல் ( நீண்ட ஆயுள் )

2. இளமை காத்தல் ( rejuvenation )

3. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்

இப்பயிற்சியை தொடர்ந்து செய்து வரும் மனவளக்கலை அன்பர்களை கவனித்துப் பார்த்தால் , இது உண்மை போலவே தெரிகிறது. ஏனெனில், அவர்கள் நல்ல சுறுசுறுப்புடனும் , பிரகாசமான முகத்துடனும் , ஆரோக்கியமாக வலம் வருகிறார்கள்.

ஒரு யோகப் பயிற்சி முறை, ஒரு மனிதனின் ஆயுளை கூட்டுகிறது என்றால் – அதன் உண்மையான அர்த்தம் , அது அவருடைய மரபணுக்களில்( DNA ) மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதே ஆகும் .

ஏனெனில், தற்போதைய விஞ்ஞானம் என்ன கூறுகிறது என்றால் – மனிதனின் , ஒரு சில குறிப்பிட்ட மரபணுக்கள் அவனுடைய ஆயுட்காலத்தை தீர்மானிக்கிறது .

எனவே, ஒரு விஞ்ஞானிகளின் குழுவானது ( team of Scientists ) , இந்த காயகல்ப பயிற்சியை நீண்டகால ஆராய்ச்சிக்கு ( longitudinal research ) எடுத்துக் கொண்டு- அது எவ்வாறு நம்முடைய உயிரணுக்களில் உள்ள ஜீன்களில் ( Sperm DNA ) தாக்கத்தையும், மாற்றத்தையும் உண்டாக்குகின்றன என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் . இந்த ஆராய்ச்சி முடிவுகள் உலக அளவில் மக்களுக்கு பயன் தருமாறு அமையும்.

அந்த விஞ்ஞானிகளின் குழுவில், மூன்று ஒரு பங்கு நிபுணர்கள் ( 1/3 ) – மனவளக்கலையிலும் , காயகல்ப பயிற்சியிலும் அனுபவமும், தேர்ச்சியும் பெற்ற விஞ்ஞானிகளாக இருக்க வேண்டும் . காரணம், அப்போதுதான் , ஒருதலை பட்சமான முடிவுகள் ( biased conclusion ) தடுக்கப்படும் .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top